search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவக்கல்வி பயில தேர்வான அரசு பள்ளி மாணவ, மாணவிகள்.
    X
    மருத்துவக்கல்வி பயில தேர்வான அரசு பள்ளி மாணவ, மாணவிகள்.

    அரசு பள்ளி மாணவர்கள் 25 பேரின் மருத்துவக்கல்வி கனவு நனவானது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 42 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 படித்து பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இலவசமாக மாவட்ட கல்வித்துறை சார்பில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 95 மாணவர்கள் தேர்வானார்கள்.

    மருத்துவ படிப்புகளுக்கான முதல் நாள் கவுன்சிலிங் சென்னையில் தொடங்கியது. முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் ஏற்பாட்டில் அரசு பள்ளி மாணவர்கள் சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்றனர். நீட் தேர்வு இலவச பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுரேஷ் உடன் சென்றார்.

    இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 42 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களில் மதிப்பெண் அடிப்படையில் 25 மாணவ-மாணவிகள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அதன்படி ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வைஷ்ணவி கோவை மருத்துவக்கல்லூரியிலும், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி மதுரை மருத்துவக்கல்லூரியிலும், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி  மாணவி காவ்யா தேனி மருத்துவக்கல்லூரியிலும், பொல்லிகாளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காஞ்சனா சிவகங்கை மருத்துவக்கல்லூரியிலும், கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் பிரசாந்த் திருப்பூர் மருத்துவக்கல்லூரியிலும் படிக்க தேர்வானார்கள்.

    இதுபோல் ஜெய்வாபாய் மாநகராட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி நர்மதா நாகப்பட்டினம் மருத்துவக்கல்லூரியிலும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷ்னி விருதுநகர் மருத்துவக் கல்லூரியிலும், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரியா திண்டுக்கல் மருத்துவக்கல்லூரியிலும், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பத்ரி நாராயணன் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியிலும், ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மோகலதா கோவை பி.எஸ்.ஜி.மருத்துவக்கல்லூரியிலும் படிக்க தேர்வானார்கள்.

    திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீஜா திண்டுக்கல் மருத்துவக் கல்லூரியிலும், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மதன் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரியிலும், வி.கே.அரசு மேல்நிலைப் பள்ளி  மாணவி ரம்யா வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகன் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரியிலும், மூலனூர் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நவநீதகிருஷ்ணன் கிருஷ்ணகிரி செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியிலும் படிக்க தேர்வானார்கள்.

    ஊத்துக்குளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா சென்னை தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியிலும், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி லாமினி மதுரை சி.எஸ்.ஐ.பல் மருத்துவக் கல்லூரியிலும், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா நீலகிரி மருத்துவ கல்லூரியிலும், பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மோகன் கடலூர் அரசு பல் மருத்துவக்கல்லூரியிலும், திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரிப்பிரியா திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவக்கல்லூரியிலும், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிராமி திருவள்ளூர் பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரியில் படிக்க தேர்வானார்கள்.

    இதுதவிர திருப்பூர் மாநகராட்சி பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவி கவுசிகா, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் திருமுருகன், திருப்பூர் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதன்ராஜ், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பார்த்திபன் ஆகியோர் இட ஒதுக்கீடு பெற்றும் வேறு மருத்துவக் கல்லூரியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 18 அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர இடம் பெற்றனர். இந்த ஆண்டு 25 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் பாஸ்கர். இவரது மகள் காவியா. தந்தை பணியாற்றும் பள்ளியிலேயே 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்து வந்தார்.தற்போது நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு 318 மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் 135வது  இடம் பிடித்துள்ளார்.   கலந்தாய்வில் கலந்துகொண்டு தேனி மருத்துவ கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு ஆணை பெற்றுள்ளார். காவியாவின் தங்கை ரிதன்யாவும் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில்   10ம் வகுப்பு படித்து வருகின்றார். மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவி காவியாவை ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள்  பாராட்டினர்.

    திருமுருகன்பூண்டி அருகே பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.  பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிகிறார்.  இவரது  மகன் ஜெகன். பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளியில்  பிளஸ் 2 படித்து  ‘நீட்’ தேர்வெழுதி  7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டில்  மருத்துவ படிப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.இதுகுறித்து ஜெகன் கூறுகையில்,

    ‘’என் பெற்றோருக்குநான் டாக்டராக வேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளி உயிரியல் பாட ஆசிரியை சுமித்ரா, டாக்டர் படிப்புக்குரிய பயிற்சி பெற என்னை சிறப்பாக ஊக்குவித்தார்.அதன் மூலம் எனக்கும் அந்த ஆர்வம் வந்தது. தலைமையாசிரியர் குமரேசன் உள்ளிட்ட பிற ஆசிரியர்களும் நல்ல முறையில் ஊக்குவித்ததால், என்னால் வெற்றி பெற முடிந்தது என்றார்.தலைமையாசிரியர் குமரேசன் கூறுகையில்,

    பெரியாயிபாளையம் பள்ளி வரலாற்றில் முதன் முறையாக, மாணவன் ஜெகன்  ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். விடா முயற்சி, கடின உழைப்பே இதற்கு காரணம்  என்றார். மாணவரின் தந்தை கணேசன் கூறுகையில், ‘’என் மகன் டாக்டராக வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அதற்கேற்ப தலைமையாசிரியை உள்ளிட்டோர் சிறப்பான முறையில் ஊக்குவித்தனர். உள் இடஒதுக்கீட்டால் எங்களை போன்ற சாமானியன் வீட்டு பிள்ளைக்கூட டாக்டராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது  என்றார்.
    Next Story
    ×