search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜிப்மர் மருத்துவமனை
    X
    ஜிப்மர் மருத்துவமனை

    ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்குகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜிப்மரில் நாளை மறுநாள் முதல் 7-ந் தேதி வரை எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
    புதுச்சேரி:

    ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ஜிப்மர் நிர்வாகம் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) காலை 9 மணி முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கை ஜிப்மர் அகாடமி சென்டரில் உள்ள மினி ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. இடங்கள் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் அவசியம். மாணவர் சேர்க்கைக்கு வருவோர் நீட் தேர்வு எழுதுவதற்கு கொடுத்திருந்த அடையாள அட்டை, நீட் தேர்வு ஹால் டிக்கெட், தேசிய தேர்வு முகமை அளித்த தரவரிசை கடிதம், ஆன்லைனில் பெறப்பட்ட இட ஒதுக்கீடு கடிதம், பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டும்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கையில் ஏதாவது மாற்றம் உள்ளதா? என்பது குறித்து ஜிப்மர் மற்றும் மத்திய மருத்துவ கலந்தாய்வு கமிட்டி இணையதளங்களை பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×