search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் மாநகராட்சி
    X
    காஞ்சிபுரம் மாநகராட்சி

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 156 வார்டுகள்

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் என மொத்தம் 57 வார்டுகள் உள்ளன.


    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சியும், குன்றத்தூர், மாங்காடு ஆகிய 2 நகராட்சிகளும், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய 3 பேரூராட்சிகளும் உள்ளன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகள், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகள் என மொத்தம் 57 வார்டுகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகள், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் என மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 33 ஆயிரம் ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 42 ஆயிரம் பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர் 32 பேர் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 32 வாக்காளர்கள் உள்ளனர்.

    Next Story
    ×