என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயிலில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்ட முருகன்.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் சிகிச்சை
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்றனர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.
ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு கடந்த சில நாட்களாக பல் வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் முருகனை அழைத்து சென்றனர். அங்கு முருகனுக்கு பல் வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த சில வருடங்களாக முருகன் காவி உடையில் வெளியே வந்தார். ஆனால் இன்று வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். சிகிச்சைக்கு பிறகு முருகன் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Next Story