என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து நெல்லை மேலப்பாளையத்தில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடு
    X
    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து நெல்லை மேலப்பாளையத்தில் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடு

    நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல்

    நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கும், தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது

    நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இந்த 55வார்டுகளும் நெல்லை, தச்சநல்லூர், பாளை, மேலப் பாளையம் என 4 மண்டலங் களாக பிரிக்கப் பட்டுள்ளது.

    இந்த 4 மண்டலங்களிலும் உள்ள வார்டுகளுக்கு, அந் தந்த மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய லாம். வேட்பு மனுக்கள் நாளை 28-ந்தேதி முதல் பெறப்படுகிறது.

    வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அந்தந்த மண்டல அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம். இதற்காக மண்டல உதவி ஆணையர் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். நெல்லை மாநகராட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆணையர் விஷ்ணு சந்திரன் செய்து வருகிறார்.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சிங்கை, களக்காடு ஆகிய 3 நகராட்சிகள் உள்ளன. இதில் 3 நகராட்சி களிலும் சேர்த்து மொத்தம் 69 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தேர்தல் அதிகாரிகளாக அந்தந்த நகராட்சி ஆணையர்கள் செயல்படு வார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ளன. இந்த 17 பேரூராட்சிகளிலும் 273 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

    வேட்புமனு தாக்கல் செய்ய அடுத்த மாதம் 4-ந்தேதி இறுதி நாளாகும். எனவே வார்டுகளில் போட்டியிடுபவர்கள் வருகிற 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய் யலாம். அனைத்து வேட்பு மனுக்களும் அந்தந்த அலுவலகத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி பரிசீலிக்கப் படும். இதில் தகுதியுள்ள வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

    வேட்புமனுவை திரும்பப் பெற அடுத்த மாதம் 7-ந்தேதி இறுதி நாளாகும். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய வருகிற 16-ந்தேதி வரை கால அவகாசம் உள்ளது. அடுத்த மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அடுத்த மாதம் 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 2-ந்தேதி வெற்றிபெற்ற உறுப்பினர்கள், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பதவி ஏற்பார்கள். மார்ச் 4-ம் தேதி வெற்றிபெற்ற உறுப்பினர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கூடி, தலைவர் -துணைத் தலைவர் ஆகியவர்களை தேர்ந்தெடுப் பார்கள். நெல்லை மாநகராட்சி யில் மேயர், துணை மேயர் தேர்தல் அன்று நடைபெறும்.

    நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குவதை முன்னிட்டு வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
    அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் இடத்தில் கூடுதலாக நிறுத்தப் பட்டு கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.

    வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுடன் 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேற்பட்டவர் களுக்கு அனுமதி கிடையாது. தேர்தல் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருவதால், தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×