என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

    மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    மனைவி  பிரிந்து சென்றதால் மனமுடைந்த தொழிலாளி  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனியை சேர்ந்தவர் மருதாசலம் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யா (41). இவர் சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
     
    மருதாச்சலத்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி கணவன்-மனைவிக் கிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சமாதானப்படுத்த வந்த சத்யாவின் தாயாரை மருதாசலம் செருப்பால் அடித்துள்ளார். 

    இதனால் கோபமடைந்த சத்யா கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மருதாச்சலம் மனைவியிடம் சமாதானம் பேசி குடும்ப நடத்த அழைத்துள்ளார். 

    ஆனால் சத்யா வர மறுத்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த மருதாசலம் நேற்று வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். 

    அவரது உறவினர் வீட்டுக் கதவைத் தட்டியபோது பதில் ஏதும் வராததால் சந்தேகமடைந்து  ஜன்னலை எட்டி பார்த்துள்ளார். அப்போது மருதாச்சலம் வீட்டில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மருதாச்சலம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×