என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிலும் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  குன்னூர்:

  நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் பகுதியில் ராணுவ பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது.

  இங்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிருந்த வெளிநாட்டினை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உள்பட 600 பேர் சமீபத்தில் பயிற்சிக்காக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு பயிற்சிக்கு சென்றனர்.

  பயிற்சி முடிந்து சில நாட்களுக்கு முன்பு குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு திரும்பி வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  இதில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  தொடர்ந்து அங்குள்ள மற்ற ராணுவ அதிகாரிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 63 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, சமீபத்தில் இங்குள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக நாட்டின் பல்வேறு பகுதிக்கு சென்று வந்தனர். அவர்களில் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம் என்றனர்.
  Next Story
  ×