என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
கார் சர்வீஸ் சென்டரில் ரூ.3 லட்சம் திருட்டு
By
மாலை மலர்22 Jan 2022 11:02 AM GMT (Updated: 22 Jan 2022 11:02 AM GMT)

சர்வீஸ் சென்டரில் கணக்காளராக பணிபுரிந்து வரும் ரஞ்சித் என்பவர் இரவு பணியை முடித்து விட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.
திருப்பூர்:
திருப்பூர்-பல்லடம் சாலை டி.கே.டி பஸ் நிறுத்தம் அருகில் பிரபல கார் நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்உள்ளது. இங்கு தினமும் கார்கள் சர்வீஸ் செய்து தரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வீஸ் சென்டரில் கணக்காளராக பணிபுரிந்து வரும் ரஞ்சித் என்பவர் இரவு பணியை முடித்து விட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.
இந்தநிலையில் காலை 10 மணி அளவில் அலுவலகம் வந்த போது அலுவலக பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு உள்ளே சென்றுபார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் திருட்டுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த அலுவலகம் வந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் திருட்டு குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு பணிபுரிபவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×