search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பட்டா இருந்தும் இடம் தெரியாமல் தவிக்கும் பொதுமக்கள்

    பண்ணைக்கிணறு கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட இடம் எங்குள்ளது என்பதே தெரியவில்லை.
    உடுமலை:

    உடுமலை தாலுகா பண்ணைக்கிணறு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 10 ஏக்கர் நிலம், இலவச வீட்டு மனை பட்டா வழங்க கையகப்படுத்தப்பட்டது. கடந்த, 2014ல் 370 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இலவச வீட்டு மனை பட்டா  திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

    ஆனால் பட்டா வழங்கிய இடம் எங்கே உள்ளது என தெரியாததால் பயனாளிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.பல முறை வலியுறுத்தியும் தங்களுக்குரிய இடத்தையும், வருவாய்த்துறையினர் அளவீடு செய்து தரவில்லை.

    அப்போது, பட்டா பெறவும், இடம் அளவீட்டுக்காகவும் பயனாளிகளிடம், அரசியல் பிரமுகர்கள் வசூலில் ஈடுபட்டதாக  புகார் எழுந்தது. இவ்வாறு பல கட்ட இழுபறிக்குப்பிறகும் இலவச வீட்டு மனை பட்டாவிற்கான உத்தரவு நகல்களை மட்டும் கையில் வைத்து கொண்டு  செய்வதறியாமல் பயனாளிகள் திணறி வருகின்றனர்.

    இதுகுறித்து பயனாளிகள் கூறுகையில், பண்ணைக்கிணறு கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தேர்வு செய்யப்பட்ட இடம் எங்குள்ளது என்பதே தெரியவில்லை. வீட்டு மனை பட்டா வழங்கியும்  பல ஆண்டுகளாக இடம் ஒதுக்கப்படவில்லை.

    பல ஆண்டுகளாக போராடியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×