என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 15 போலீசாருக்கு கொரோனா
Byமாலை மலர்20 Jan 2022 11:17 AM GMT (Updated: 20 Jan 2022 11:17 AM GMT)
கடலூர் மாவட்ட போலீசார் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடலூர்:
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 317 பேருக்கு கொரோனா இருந்து வந்த நிலையில் நேற்று ஒரு நாளில் 494 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் புதுநகர், தேவனாம்பட்டினம், முதுநகர், அண்ணாமலை நகர், சிதம்பரம், விருத்தாச்சலம், நெய்வேலி டவுன்ஷிப், திட்டக்குடி, பண்ருட்டி கலால்துறை, சேத்தியாதோப்பு, புத்தூர், குமராட்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் 15 போலீசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவல் உள்ளதா? என்பதனை பரிசோதனை செய்தனர்.
இதில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் மேற்கண்ட போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 15 போலீசாருக்கு கடந்த 2 நாட்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 போலீசாரும் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களை சார்ந்த பலருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதா? என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
கொரோனா தொற்று பாதிப்பு போலீசார் மத்தியில் பீதி யை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்ட போலீசார் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X