search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாவட்டத்தில் இது வரை 98 சதவீதம் பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் மாவட்டத்தில் இது வரை 98 சதவீதம் பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
    சேலம்:

    தமிழர்களின் திருநாளான  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட  21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும்  மொத்தம்  உள்ள 1601 ரேசன் கடைகள் மூலம் கடந்த 4-ந் தேதி முதல் இந்த பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.  நேற்றும்  21 ஆயிரத்து 199 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

    மாவட்டத்தில் இது வரை 10 லட்சத்து 36  ஆயிரத்து 970 பேர் பொங்கல் தொகுப்பு பெற்றுள்ளனர்.  இது 98 சதவீதம் ஆகும். இன்னும்  21 ஆயிரத்து 69 பேர் பொங்கல் பரிசு பெறவில்லை. அவர்கள் இனி வரும் நாட்களில் பெற்றுக்கொள்ளலாம்    என கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×