search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லை மாநகரில் இன்று 299 பேருக்கு கொரோனா-5 போலீசாருக்கு தொற்றால் ஆயுதப்படை கேன்டீன் மூடல்

    நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகரில் மட்டும் 299 பேர் அடங்குவர்.
    நெல்லை:
     
    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர் ந்து உயர்ந்து வருகிறது.

    நேற்று அதிகபட்சமாக ஒரே நாளில் 707 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் புதிதாக 692 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக மாநகர் பகுதியில் 299 பேரும்,  வள்ளியூரில் 114 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று பாதிக்கப்பட்டவர்களில் 5 அரசு டாக்டர்கள், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர் கள் 5 பேர், கங்கை கொண்டான் சிப்காட் ஊழியர்கள் சிலரும் அடங்குவர்.

    பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு என கேன்டீன் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே  போலீசார் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் சலுகை விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்பொருள் அங்காடியும் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் போலீஸ் கேன்டீனில் பணியாற்றும் 5 போலீசாருக்கு தொற்று இன்று உறுதியானது. இதனால் கேன்டீனை 5 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டது. உடனடியாக கேன்டீன் மூடப்பட்டு அந்த வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

    இதேபோல் தொற்று கண்டறியப்பட்ட அனைவரது தெருக்களிலும், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.

    மாநகர பகுதியில் தொற்று உயர்ந்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை போலீசார் ஆங்காங்கே மறித்து ரூ.500 அபாரதம் வசூலித்தனர்.

    மேலும் சமூக இடைவெளி இன்றியும், அதிக அளவு பொதுமக்கள் திரண்ட கடையின் உரிமையாளரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    தொடர்ந்து மாநகர் பகுதிகளில் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும், சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×