search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    வாடிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி போலீஸ்காரர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இன்று மின்சாரம் தாக்கியதில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி கள்ளர் தெருவை சேர்ந்தவர் செல்லமணி. இவரது மகன் மகேந்திரன் (வயது 30).

    இவர் அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குற்றவியல் தனிப்படையிலும் இருந்தார். இன்று காலை மகேந்திரன் வீட்டில் வயரிங் வேலை நடந்தது. அந்த பணியை அவர் பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மகேந்திரன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உறவினர்கள் அவரை வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார். பலியான மகேந்திரனுக்கு திவ்யா என்ற மனைவியும், ஜீவிதன் என்ற மகனும் உள்ளனர்.

    Next Story
    ×