என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
  X
  ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

  திருவாரூரில் பொங்கல் விளையாட்டு விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவாரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
  திருவாரூர்:

  திருவாரூரில் பொங்கலை முன்னிட்டு ரோட்டரி சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. 

  சங்க தலைவர் ராஜ் கருணாநிதி தலைமை வகித்தார். இதில் 
  பெண்களுக்கான கோலப் போட்டிகள், இசை நாற்காலிகள், ஆண்களுக்கான கேரம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

  கோலப் போட்டி நடுவர்களாக கவுசல்யா, அருள்மேரி ஆகியோர் பங்கேற்றனர். கோலப் போட்டியில் கலந்து கொண்ட 120 பேருக்கும் புடவைகளும், முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பட்டுப் புடவையும் வழங்கப்பட்டது. 

  வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெருமாள், இன்ஸ்பெக்டர் ரமேஷ், திமுக நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் பரிசு வழங்கினர்.

  நிகழ்ச்சியில் ரோட்டரி நிர்வாகிகள் ரஜினிசின்னா, உத்திராபதி மாரிமுத்து, ராஜன், சிவகுமார் சுகன்யா, மதுபாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×