search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் குறைகிறது

    கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நேற்று கொரோனாவால் தமிழகம் முழுவதும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிகரிக்கத் தொடங்கியது.

    தினசரி பாதிப்பு 1,500 ஆக இருந்த நிலையில், மளமளவென்று உயர்ந்தது. ஜனவரி முதல் வாரத்தில் பாதிப்பு 10 ஆயிரமாக அதிகரித்தது. கடந்த 10-ந்தேதி 13,958 பேரும், 11-ந்தேதி 15,379 பேரும், 12-ந்தேதி 17,934 பேரும் பாதிக்கப்பட்டனர்.

    13-ந்தேதி இந்த எண்ணிக்கை 20,911 ஆக மேலும் உயர்ந்தது. முந்தைய நாளை விட 2,977 கூடுதலாக பாதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் தொற்று பரவல் ஒரு சில நாட்களாக சற்று குறைந்து வருகிறது. 14-ந்தேதி புதிய பாதிப்பு 23,459 ஆக இருந்த போதிலும் முன்தினத்தை விட 2,458 அதிகரித்து இருந்தது.

    15-ந்தேதி 23,989 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பின் அளவு 530 ஆக குறைந்தது. நேற்று (16-ந்தேதி) இந்த எண்ணிக்கை மேலும் சரிந்தது. 23,975 பேர் பாதிக்கப்பட்டனர்.

    மொத்த பாதிப்பு அதிகரித்து இருந்த போதிலும், கூடுதலாக தொற்று பரவியது 14 பேருக்கு மட்டுமே. கடந்த 4 நாட்களாக தொற்று பரவல் குறைந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. நேற்று கொரோனாவால் தமிழகம் முழுவதும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 10,988 ஆக உள்ளது. மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் பாதிப்பின் உச்சகட்டமாக 7,184 பேர் உள்ளனர். அடுத்ததாக அண்ணாநகரும், அதை தொடர்ந்து கோடம்பாக்கமும், அடையாறும் இடம் பெற்றுள்ளன. சென்னையில் மொத்தம் 57 ஆயிரத்து 591 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மண்டலம் வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:-

    திருவொற்றியூர்-1,336
    மணலி- 975
    மாதவரம்- 1,797
    தண்டையார்பேட்டை- 2,989
    ராயபுரம்- 3,610
    திரு.வி.நகர்- 3,962
    அம்பத்தூர்- 3,866
    அண்ணாநகர்- 6,798
    தேனாம்பேட்டை- 7,184
    கோடம்பாக்கம்- 6,254
    வளசரவாக்கம்- 3,830
    ஆலந்தூர்- 3,092
    அடையாறு- 6,235
    பெருங்குடி- 3,588
    சோழிங்கநல்லூர்- 2,010
    பிற மாவட்டங்கள்- 65

    மொத்தம்- 57,591.

    Next Story
    ×