என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  தென்காசி மாவட்டத்தில் 4 பேர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்காசி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி, வாலிபர் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
  நெல்லை:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கப்பழம் (வயது53), கூலித்தொழிலாளி. 

  இவரது மனைவி அன்னக் கிளி (48). தங்கப்பழத்திற்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு தகராறு செய்துள்ளார். 

  இதனை அன்னக்கிளி மற்றும் அவரது மகன் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த தங்கப்பழம் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.

  அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
   
  சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை அடுத்த மருதம்கிணறு தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (60). 

  இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரி களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

  சின்னக்கோவிலான் குளம் அருகே உள்ள ஊத்தன்குளத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (42). தீராத வயிற்று வலி காரணமாக இவர் கடந்த 13-ந்தேதி விஷம் குடித்தார். 

  அவரை சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். 
   
  சங்கரன்கோவில் அருகே உள்ள ஊத்தான்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் ஆதிமூலம் (வயது22).

  இவர் விவசாயம் செய்து வந்தார். வீடு கட்ட வேண்டும் என்பதற் காக விவசாயத்தில் கிடைத்த பணத்தை வீட்டில் சேமித்து வைத்துள்ளார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சின்னகோவிலான் குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆதிமூலம் உடலை மீட்டு சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×