search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குழந்தை பெற்ற 7 சிறுமிகள்

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே வாரத்தில் 7 சிறுமிகள் குழந்தை பெற்றனர்
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் பள்ளிகள்  விடுமுறையால் வீட்டில் உள்ள சிறுமிகளுக்கு பெற்றோர்கள் 18 வயதை எட்டும் முன்பே தங்கள் நெருங்கிய உறவினரை வரவழைத்து திருமணம் செய்துவிடுகின்றனர்.

    ஒருசில இடங்களில் மட்டுமே இந்த திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான திருமணங்கள் அதிகாரிகளுக்கு தெரிவதில்லை. பெண்குழந்தைகள் காதல் வயப்பட்டு வீட்டைவிட்டு ஓடிவிடும் நிகழ்வை தடுக்கும் வகையில் பெரும்பாலான பெற்றோர்கள் இதுபோன்ற முடிவை எடுக்கின்றனர்.

    அந்த குழந்தைகள் கருவுற்று அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் போது உண்மை தெரியவந்து திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இதனை தவிர்க்கும் வகையில் பலர் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளும் சம்பவமும் நடந்து வருகிறது.

    கடந்த 7ம் தேதி முதல் 14ம் தேதி வரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வடமதுரை, செங்குறிச்சி, வேடசந்தூர், நிலக்கோட்டை, அய்யலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய சிறுமிகள் குழந்தை பெற்றுள்ளனர்.

    இது டாக்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படிப்பறிவில்லாத குழந்தைகளும், படித்த சிறுமிகளும் தங்கள் பெற்றோருக்காக இதுபோன்ற திருமணங்களுக்கு சம்மதம் தெரிவித்து விடுகின்றனர். ஆனால் பின்வரும் விளைவுகளை பற்றி அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.  

    திருமணம் செய்து கொண்ட வாலிபர் மட்டுமின்றி, திருமணம் செய்து வைத்தவர்களும் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர். கணவர் சிறைக்கு சென்றுவிடுவதால் குழந்தை பெற்றுக்கொள்ளும் சிறுமிகளும் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். இதனால் தற்கொலை உள்ளிட்ட சம்பவங்களும் நடக்கிறது.
    Next Story
    ×