என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாணவர் பலி
  X
  மாணவர் பலி

  திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பிளஸ்-1 மாணவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் தொடர்பாக நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  திருப்பத்தூர்:

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் மாலை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது மஞ்சுவிரட்டை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் எதிர்பாராதவிதமாக மாடு ஒன்று புகுந்து சிலரை முட்டியது. கொண்ணத்தான்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் பாலாஜியும் (வயது 16) மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார். பிளஸ்-1 மாணவரான அவரை, உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பாலாஜி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனை செய்து நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

  இந்த சம்பவம் குறித்து நெற்குப்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×