என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை வேளச்சேரி திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வமாரி (வயது 40). இவர், வீட்டை பூட்டிவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story