என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  திருட்டு நடந்த வீட்டை படத்தில் காணலாம்
  X
  திருட்டு நடந்த வீட்டை படத்தில் காணலாம்

  திண்டுக்கல்லில் பணம்- டி.வி.திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் டி.வி. திருடப்பட்டது
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் ரவுண்டு ரோடு புதூரைச் சேர்ந்த முகமது ரபீக் மனைவி பரிதாபேகம். இவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

  இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் திருநகர் பகுதியில் கேட்பாடற்று கிடந்த ஒரு கைபையை எடுத்து சோதனை செய்தனர். அதில் பரிதாபேகத்தின் முகவரி மற்றும் செல்போன் எண் இருந்தது.

  அவருக்கு போன்செய்து கேட்டபோது அது தன்னுடைய பேக் என உறுதி செய்தார். வீட்டில் இருந்த பேக் எப்படி வேறு தெருவில் கிடந்தது என அதிர்ச்சியடைந்து தன் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

  வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் டி.வி. திருட்டு போயிருந்தது. இதுகுறித்த நகர் வடக்கு போலீசாருக்கு அவர்  புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×