என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருமண உதவித்தொகை வழங்கிய காட்சி
    X
    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருமண உதவித்தொகை வழங்கிய காட்சி

    திருச்செந்தூரில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 218 பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 218 பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் ஆகிய வற்றை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய கூட்டஅரங்கில்  நடந்தது.  

    சமூக நலத்துறை மாவட்ட கண்காணிப்பாளர் ஹேமலதா வரவேற்று பேசினார். தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கி  218 பெண்களுக்கு  திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:&

    தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது பெண்களுக்கு சம உரிமையை பெற்றுத்தந்தார்.  ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குதல் போன்ற திட்டங்களையும் கொண்டு வந்தார்.

    தற்போது அவரது வழியில் தமிழக முதல்வராக நல்லாட்சி நடத்தி வரும் நமது முதல்வர் ஸ்டாலின், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2017&ம் ஆண்டில் இருந்து வழங்காமல் நிலுவையில் இருந்த ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்கத்தை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

    அதன் அடிப்படையில்  திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நிலுவையில் இருந்த 218 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×