search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை
    X
    யானை

    மஞ்சூர் அருகே வனத்துறை ஓய்வு விடுதி கேட்டை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை

    காட்டு யானை ஒன்று விடுதியின் கேட்டை உடைத்து தள்ளியது. நீண்ட நேரம் அந்த வளாகத்திலேயே முகாமிட்ட யானை இங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பென்ஸ்டாக். இப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தங்குவது வழக்கம்.

    தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விடுதி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று விடுதியின் கேட்டை உடைத்து தள்ளியது. நீண்ட நேரம் அந்த வளாகத்திலேயே முகாமிட்ட யானை இங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    பென்ஸ்டாக்கை ஒட்டியுள்ள கெத்தை பெரும்பள்ளம், உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக 2 குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் கெத்தை பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்வதும், மஞ்சூர் கோவை சாலையில் ஆங்காங்கே சென்று அந்த வழியாக வரக் கூடிய பஸ்கள், தனியார் வானங்களை வழிமறிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை ஒன்று தான் இந்த விடுதியின் முகப்பு கேட்டை உடைத்து தள்ளியுள்ளது. இதைதொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் வனவர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் பென்ஸ்டாக் கெத்தை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிதது வருகிறார்கள்.

    குட்டிகளுடன் நடமாடும் யானைகள் பெரும்பள்ளம் பகுதியில் இருந்து முள்ளி வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் ஒற்றை காட்டு யானை மட்டும் கெத்தை சுற்றுப்புற பகுதிகளில் நடமாடி வருவதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×