என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வெறிச்சோடி காணப்படும் காட்சி.
தூத்துக்குடி அருகே வெறிச்சோடிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை
By
மாலை மலர்15 Jan 2022 8:11 AM GMT (Updated: 15 Jan 2022 8:11 AM GMT)

காணும் பொங்கலை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமாக வீரபாண்டிய கட்டபொம்மன் வேலூர் கோட்டை திகழ்ந்து வருகிறது.
இந்த சுற்றுலா தளத்தில் ஆண்டுதோறும் தமிழக திருநாளான மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இங்கு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்த ஆண்டு கடந்த ஆண்டைப் போல் கொரோனா தொற்று நோயால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
இதனால் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் இன்று காலையில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை குறைவாக இருந்தாலும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் இந்துக்களுக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளன.
கோட்டைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Next Story
×