என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
பணகுடியில் ரூ.7.5 லட்சம் தண்டவாள பொருட்கள் திருட்டு
By
மாலை மலர்15 Jan 2022 8:11 AM GMT (Updated: 15 Jan 2022 8:13 AM GMT)

பணகுடி பகுதியில் தண்டவாள பணிகள் நடந்து வருகிறது. அந்த பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.7.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் தண்டவாள பணிகள் நடந்து வருகிறது. இதனை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் மேலாளராக நெல்லையைச் சேர்ந்த கண்ணன் (வயது 28) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று தண்டவாள பணிகளை மேற்பார்வை செய்தபோது, ஏராளமான இரும்பு பொருட்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
கணக்கிட்டுப் பார்த்தபோது 25 டன் அளவுக்கு இரும்பு பொருட்கள் காணவில்லை. இதன் மதிப்பு ரூ 7.5 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கண்ணன் பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ7.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடியது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×