என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பணகுடியில் கட்டிட தொழிலாளி தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு வந்தார். அப்போது புது மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    குமரி மாவட்டம் மேக்கா மண்டபம் அருகே உள்ள பள்ளிக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்தவர் சுஜின் (வயது28), கட்டிட தொழிலாளி. 

    இவர் தனக்கு புது மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என்று தனது தந்தை ஜெயச்சந்திரனிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் வாங்கி கொடுக்கவில்லை. 

    இதைத்தொடர்ந்து சுஜின், நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த யாக்கோபுபுரத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு பொங்கல் கொண்டாட வந்தார். 

    அங்கு மனைவி மற்றும் மாமனாரிடம் புது மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்களும் 2 மாதங்கள் கழித்து வாங்கி தருகிறோம் என்று கூறி உள்ளனர். 

    ஆனால் இதில் மனமுடைந்த சுஜின் சம்பவத்தன்று விஷம் குடித்தார். உடனடியாக அவரை நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×