என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
நெல்லையில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது42), விவசாயி.
இவருக்கும் சுத்தமல்லியை சேர்ந்த கோமுராஜ் என்ற கோமு (28) என்பவருக்கும் முன் தகராறு இருந்து வந்தது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோமுராஜ் வளர்த்த ஆடு இறந்தது. இதற்கு நடராஜன் தான் காரணம் என்று அவர்களுக்குள் முன்தகராறு இருந்தது.
இந்த நிலையில் நேற்று நடராஜன் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கோமு மற்றும் அவரது நண்பரான முத்துராமன் (38) ஆகிய 2 பேரும் நடராஜனை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து நடராஜன் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமு, முத்துராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story