என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கடையத்தில் டிரைவர் தற்கொலை
கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள மைலப்பபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மகன் முத்துக்குமார் (33), ஆட்டோ டிரைவர்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று மாலை அங்குள்ள காலனி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார் தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story