என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  கழிவறையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையநல்லூரில் கணவரிடம் பிரச்சனையில் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த இளம்பெண் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  தென்காசி:

  கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கருமாரி என்ற மாரியம்மாள்(வயது 20) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

  திருமணம் முடிந்த ஒரு மாதத்திலேயே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையால் கோபித்துக்கொண்ட மாரியம்மாள், தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

  இந்நிலையில் நேற்று பொங்கல் தினத்தன்று நள்ளிரவில் வீட்டில் உள்ள கழிவறையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

  தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், நேற்று மாரியம்மாளை சமாதானம்  செய்து கணவருடன் அனுப்பி வைக்க அவரது தாயார் முனியம்மாள்(62) முடிவு செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

  இதில் மாரியம்மாளுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  Next Story
  ×