என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உயிரிழப்பு
  X
  உயிரிழப்பு

  துடியலூர் அருகே சுவரில் மோதி சிறுமி உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துடியலூர் அருகே தொட்டில் கட்டி விளையாடியபோது தலை வீட்டின் சுவரில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  கவுண்டம்பாளையம்:

  கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது38). கட்டிட தொழிலாளி.

  இவருக்கு திருமணமாகி மனைவியும், ஸ்ரீமதி(11) என்ற மகளும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவி வீட்டில் இருந்தார்.

  நேற்று வழக்கம் போல வீட்டில் இருந்த ஸ்ரீமதி அங்கிருந்த சேலையை எடுத்து தொட்டில் கட்டினார். பின்னர் அதில் ஏறி அமர்ந்து அங்கும் மிங்கும் ஆடியபடி விளையாடி கொண்டிருந்தார்.

  முதலில் லேசாக தொட்டிலை ஆட்டி விளையாடி கொண்டிருந்த அவர் நேரம் செல்ல செல்ல வேகமாக தொட்டிலை ஆட்டியுள்ளார்.

  அப்போது எதிர்பாராத விதமாக ஸ்ரீமதியின் தலை வீட்டின் சுவற்றில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.

  இதனை வீட்டில் இருந்த பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இதை கேட்டதும் மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×