என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா சிகிச்சை மையத்தில் பொங்கல் கொண்டாடிய கொரோனா நோயாளிகள்.
  X
  கொரோனா சிகிச்சை மையத்தில் பொங்கல் கொண்டாடிய கொரோனா நோயாளிகள்.

  கொடிசியா சிகிச்சை மையத்தில் பொங்கல் கொண்டாடிய கொரோனா நோயாளிகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனா தொற்று காரணமாக குடும்பத்தை பிரிந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி நோயாளிகளுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினர்.

  கோவை:

  கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

  மாவட்டம் முழுவதும் தினசரி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளிலும், லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள சிகிச்சை மையத்திலும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

  இதற்காக 3,500 படுக்கை வசதிகள் செய்யப்பட்டது. இங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  கொரோனா தொற்று காரணமாக குடும்பத்தை பிரிந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் நேற்று பொங்கல் பண்டிகையையொட்டி நோயாளிகளுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினர். கொடிசியா வளாகத்தில் கொரோனா நோயாளிகள் அனைவரும் இணைந்து கரும்பு கட்டி பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வந்ததும் வழிபாடு நடத்தினர்.  பின்னர் அனைவரும் சேர்ந்து கும்மியடித்து, பாட்டு பாடி மகிழ்ந்தனர்.

  Next Story
  ×