என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
மீனவர்கள்
கோடியக்கரை அருகே மீனவர்களை தாக்கி ரூ.2 லட்சம் மதிப்புள்ள வலை பறிப்பு- கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்
By
மாலை மலர்13 Jan 2022 10:39 AM GMT (Updated: 13 Jan 2022 10:39 AM GMT)

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தை சோந்தவர் கிருஷ்ணசாமி (வயது 43). இவருக்கு சொந்தமான பைபர் படகில் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர்கள் கஜேந்திரன், விஜயேந்திரன், ராஜகுரு, ஸ்டாலின் ஆகிய 4 பேரும் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 12 நாட்டிக்கல் தொலைவில் படகை நிறுத்தி வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மோட்டார் பொருத்திய படகில் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு வந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் புஷ்பவனம் மீனவர்கள் 4 பேரையும் கையில் வைத்திருந்த இரும்பு போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதில் அதிர்ச்சியடைந்து செய்வதறியாமல் நின்ற மீனவர்கள் 4 பேரிடமும் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலை மற்றும் மீன்பிடி உபகாரணங்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 4 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து 4 பேரும் பைபர் படகை திருப்பிக்கொண்டு மீன் பிடிப்பதை கைவிட்டு இன்று அதிகாலை கரை திரும்பினர்.
பின்னர் இதுபற்றி இன்று காலை வேதாரண்யம் கடலோர காவல் படையினரிடம் புகார் அளித்தனர். மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்கி மீன்களையும், வலைகளையும் பறித்து செல்வது வாடிக்கையாக நடந்து வருவதால் மீனவர்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் இதில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் நலன் காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
×