என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
உடன்குடியில் முககவசம் அணியாத 35 பேருக்கு அபராதம்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக உடன்குடி பகுதியில் முககவசம் அணியாத 35 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள்
உடன்குடி நகர பகுதி முழுவதும் ரோந்து சுற்றி முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 வீதம் 35 பேரிடம் அபராதம் வசூல் செய்தனர்.
மேலும் பஜார் வீதிக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ஆகியோரிடம் முககவசம் அணிய வலியுறுத்தினர். முககவசம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வற்புறுத்தினர்.
இதைபோல குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி முககவசம் இல்லாமல் பஜார் வீதிக்கு வந்தவர்களை, முககவசம் போட்டுக்கொண்டு வரும்படி வலியுறுத்தினார்.

Next Story