search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    .
    X
    .

    மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பலி

    மோகனூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதி தொழிலாளி பலியானார்.
    மோகனூர் அருகே

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பொன்னேரி கோம்பகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (35). இவர் கிரசரில் கூலி வேலை செய்து வருகிறார். 

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் வளையபட்டியில் இருந்து கஸ்தூரி மலை செல்லும் சாலையில் உள்ள அவரது உறவினர் ரஞ்சனி என்பவரது வீட்டிற்கு சென்றார். 

    அப்போது அவருக்கு பின்னால் எருமப்பட்டி பொன்னேரி கோம்பைக்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தவிஜயன் மகன் சின்னராசு (21) ஓட்டிவந்த மணல் டிராக்டர் பாலசுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

     இதில் டிராக்ட டயர் பாலசுப்பிரமணியத்தின் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.  

    இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை அதிவேகமாக ஓட்டி வந்த சின்னராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×