search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் இன்று 378 பேருக்கு கொரோனா

    நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 378 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

    தொடர் பண்டிகை காலத்தையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடி வருவதால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இன்று வெளியான பரிசோதனை முடிவில் 378 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் மாநகரில் 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர வள்ளியூரில் 46 பேரும், அம்பையில் 42 பேரும், பாளையில் 27 பேரும், ராதாபுரத்தில் 26 பேரும், சேரன்மகாதேவியில் 18 பேரும், களக்காட்டில் 12 பேரும், மானூரில் 10 பேரும், பாப்பாக்குடியில் 8 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று தொற்று பாதிக்கப்பட்டவர்களில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்ட வர்களுக்கும், டீன் அலுவலக பணியாளர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

    இதேபோல் ஏர்வாடி, பாளை பாளை தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் மாநகர பகுதியை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிலருக்கும், சந்திப்பு ரெயில்வே குடியிருப்பில் வசிக்கும் ரெயில்வே ஊழியர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்கன் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 25-க்கும் மேற்பட்ட தொழி லாளர் களுக்கு தொற்று உறுதியான நிலையில் இன்றும் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரி களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்கனவே ஒரு வார்டு உள்ள நிலையில், கூடுதலாக ஒரு கொரோனா வார்டு திறக்கப்பட்டுள்ளது.

    கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முகக்கவசம் அணிய வலியுறுத்துவது, அபராதம் விதிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    ஆனாலும் மக்களின் தொடர் அலட்சிய போக்கின் காரணமாக தொற்று பாதிப்பு குறையாமல் உள்ளது.
    Next Story
    ×