என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார நிலையினை உயர்த்திட அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் பணியினை ஆற்றிவரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3243 சதுர அடி பரப்பளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம், இளம் சிறார்களுக்கான காதுகேளாதோர் பயிற்சி மையம், உதவி உபகரணங்கள் வழங்கும் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம், சிறப்புக் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story