என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பனை ஓலைகள்.
  X
  விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள பனை ஓலைகள்.

  செங்கோட்டையில் பனை ஓலை விற்பனை மும்முரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கோட்டை பகுதியில் பொங்கலையொட்டி பனை ஓலை விற்பனை சூடுபிடித்துள்ளது.
  செங்கோட்டை:

  செங்கோட்டை பகுதியில் பொங்கலையொட்டி பனை ஓலை விற்பனை சூடுபிடித்துள்ளது.
   
  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டின் முன் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவதுடன் கிராம புறங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் மாடுகளுக்கு வர்ணம் பூசி பொங்கலிட்டு மகிழ்வர்.
   
  அவ்வாறு பொங்கலிட பனை ஓலைகளை பயன் படுத்துவது ஒரு ஐதீகம் என்பதால் பொதுமக்கள் பொங்கலிட அடுப்பு எரிப்ப தற்கு பனை ஓலையைத்தான் பயன்படுத்துவர்.

  இதனால் செங்கோட்டை பகுதியில் பனை ஓலை கட்டு கட்டாக மினிலாரி மற்றும் டிராக்டரில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 

  தற்போது பனைஒலை கட்டுகள் மத்தாளம்பாறை, அகரகட்டு, சேந்தமரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கோட்டை பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. 

  4 ஓலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.60-க்கும், ஒரு ஓலை ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
  Next Story
  ×