என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சங்கரன்கோவிலில் தொழில் அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சங்கரன்கோவிலை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளரிடம் தகராறு செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 61). ஜவுளி உற்பத்தியாளர். 

    சங்கரன்கோவில் காயிதேமில்லத் தெருவை சேர்ந்த சகோதரர்கள் அப்துல் ரசாக் (45), இப்ராகிம் (41). 

    ராமநாதன் மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமாக களப்பாகுளம் அருகே நிலம் உள்ளது. அந்த இடம் சம்பந்தமாக ராமநாதன் குடும்பத்தினருக்கும், அப்துல்லா குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

    சம்பவத்தன்று ராமநாதன், அவரது உறவினர் சரவணகுமார், களப்பாகுளத்தை சேர்ந்த பரமசிவம் ஆகியோர்  வயலுக்கு சென்று சோளம் அறுவடை செய்து கொண்டிருந்தனர். 

    அப்போது அங்கு வந்த அப்துல் ரசாக், இப்ராஹிம் ஆகியோருக்கும், ராமநாதனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ராமநாதன் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×