search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பா.ஜ.கவினரால் தாக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரி
    X
    பா.ஜ.கவினரால் தாக்கப்பட்ட தள்ளுவண்டி வியாபாரி

    பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய வழக்கில் பா.ஜனதா நிர்வாகி கைது

    தள்ளுவண்டி வைத்து அதில் பழங்கள் விற்பனை செய்து வரும் முத்துசாமி என்பவர், பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
    பல்லடம்:

    கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பயணத்தை ரத்து செய்தார். இதனை கண்டிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

    இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க சார்பில் மனிதசங்கலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி வைத்து அதில் பழங்கள் விற்பனை செய்து வரும் முத்துசாமி என்பவர், பிரதமர் மோடியை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. 

    இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலையோர வியாபாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கவும் முற்பட்டனர். இதையடுத்து  வியாபாரி அருகில் இருந்த செல்போன் கடைக்குள் ஓடியுள்ளார். இருப்பினும் கடைக்குள் புகுந்த பா.ஜ.க வினர் சாலையோர வியாபாரி முத்துச்சாமியை சரமாரியாக தாக்கினர். 

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க வினரை தடுத்து தாக்குதல் நடத்தியவர்களையும், தாக்கப்பட்டவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர். இதில் இரு தரப்பினரிடமும் விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், 

    இந்த சம்பவம் குறித்து தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி மற்றும் 7 பா.ஜ.வினர் மீது பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்லடம் போலீசார்,  பா.ஜ.க இளைஞரணி நிர்வாகி வரமேஷ் என்பவர் கைது செய்தனர்
    Next Story
    ×