என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட கருப்பசாமி
நாட்டு துப்பாக்கியுடன் தொழிலாளி கைது
ஒட்டன்சத்திரத்தில் நாட்டு துப்பாக்கி தயாரித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் பொருளூர் அருகே இரும்பு பட்டறையில் நாட்டு துப்பாக்கி தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் போலீசார் கருப்பசாமியை கைது செய்து வேடசந்தூர் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் பொருளூர் அருகே இரும்பு பட்டறையில் நாட்டு துப்பாக்கி தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து எஸ்.பி.சீனிவாசன் உத்தரவின்பேரில் கள்ளிமந்தயம் தனிப்பிரிவு போலீஸ் கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பொருளூர் குருப்பநாயக்கன்வலசு கிராமத்தில் கருப்பையா என்ற கருப்பசாமி (வயது56). தனது பட்டறையில் நாட்டு துப்பாக்கி தயார் செய்து பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இவர் இதற்கு முன்பு வேறு யாருக்கேனும் துப்பாக்கி தயாரித்து கொடுத்துள்ளாரா? இந்த துப்பாக்கியை யாருக்கு வழங்க தயார் செய்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story