என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு.
  X
  நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு.

  நாமக்கல்லில் சொர்க்கவாசல் திறப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல்லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
  நாமக்கல்:

  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை 4 :30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் திருப்பாதம் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளியது.  கொரோனா தொற்று காரணமாக சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

  மேலும் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 

  ஆண்டு தோறும் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக லட்டு பிரசாதம் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. 

  சொர்க்கவாசலை காண நாமக்கல் மற்றும் சுற்றுப்புறத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையால் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
  Next Story
  ×