என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  லாஸ்பேட்டையில் விபத்து- பஸ் மோதி புதுமாப்பிள்ளை பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டார் சைக்கிளில் சென்றபோது லாஸ்பேட்டையில் பஸ் மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
  புதுச்சேரி:

  புதுவை லாஸ்பேட்டை முத்துலிங்கப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது32). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

  அப்போது எதிரில் வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சுந்தர்ராஜன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோரிமேடு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விபத்தில் பலியான சுந்தர்ராஜனுக்கு திருமணமாகி சில மாதங்கள்தான் ஆவதாக போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×