என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செஞ்சி பகுதி ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் சோதனை
  X
  செஞ்சி பகுதி ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் சோதனை

  செஞ்சி பகுதி ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் சோதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேல் அருங்குணம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் சரியாக பராமரிக்கப்படாமலும் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கள் தொகுப்புகள் முறையாக வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.
  செஞ்சி:

  விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் செஞ்சி பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப் படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேல் அருங்குணம் நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் சரியாக பராமரிக்கப்படாமலும் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கள் தொகுப்புகள் முறையாக வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

  எனவே பணியில் சுனக்கமாக செயல்பட்டதாக விற்பனையாளர் ஆறுமுகம் என்பவரை மாவட்ட கலெக்டர் மோகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து அத்தியூர் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் மோகன் அங்கு வழங்கப்படும் கரும்புகள் சிறியதாகவும் காய்ந்து இருந்ததைப் பார்த்து அதனை மாற்றி வேறு கரும்பு வரவழைத்து வழங்குமாறு விற்பனையாளருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுவிநியோகத் திட்ட அலுவலர் நளினா மாவட்ட வழங்கல் அலுவலர் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  Next Story
  ×