என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு.
    X
    திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு.

    திருமருகலை தனி தாலுகாவாக மாற்ற கோரிக்கை

    திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி தென்னமரக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைப்பெற்றது.

    இதற்கு கட்சியின் மூத்த நிர்வாகி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர் வரவேற்றார்.ஒன்றிய செயலாளர் பாபுஜி கட்சியின் கொடி ஏற்றி வைத்தார்.விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மாநாட்டை தொடக்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில், தென்னமரக்குடியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும், கீழப்பூதனூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    மேலப்பூதனூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்,திருமருகலை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் பழனிவேல்,கிளை செயலாளர் முனுசாமி, கிராம சங்க செயலாளர் கலைச்செல்வன், கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தாமரைச் செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×