என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரிப்பு

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 63 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இதன் எதிரொலியாக ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. 3 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2 தினங்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 103 ஆக உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 131 ஆக அதிகரித்தது.

    இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக தினசரி பாதிப்பு 149 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 365 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 63 பேர் பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர்.

    இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 75 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 578 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×