search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடியேற்றம் நடந்த காட்சி.
    X
    கொடியேற்றம் நடந்த காட்சி.

    உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திசையன்விளை:

    தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் இன்று அதிகாலை தைப்பூச திருவிழா கொடியேற்றம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி நடந்தது.

    திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. கொடி யேற்று விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி உதயமார்த்தாண்ட பூஜை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து கொடிமரத்தில் கொடி யேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி திருவிழா நடைபெற உள்ளதாக கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
    Next Story
    ×