என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புபடம்
நூல் விலை உயர்வை கண்டித்து 18-ந்தேதி ரெயில் மறியல்
By
மாலை மலர்10 Jan 2022 7:14 AM GMT (Updated: 10 Jan 2022 7:14 AM GMT)

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வருகிற 17, 18-ந் தேதிகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பின்னல் துணி உற்பத்தியாளர் சங்க (நிட்மா) அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். செயலாளர் ராஜாமணி, பொருளாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் ஞானசேகரன், இணை செயலாளர்கள் கோபி, ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பருத்தி, பஞ்சு உட்பட மூலப்பொருட்கள் விலைகளை கட்டுப்படுத்தி, ஜவுளித்துறையை பாதுகாக்க கோரி வருகிற 18ந்தேதி, ‘நிட்மா’ சங்க அலுவலகத்தில் துவங்கி திருப்பூர் ரெயில் நிலையம் வரை ஊர்வலம் நடத்தப்படும்.
காலை 10 மணிக்கு, தொழில் அமைப்பினர் இணைந்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூர் ‘டெக்மா’ சங்க தலைவர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வருகிற 17, 18-ந் தேதிகளில் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
இதற்கு டெக்பா சங்கம் முழு ஆதரவு அளிக்கிறது. மூலப்பொருள் விலையேற்றத்தால் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு, பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்தி ஜவுளித்துறையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Next Story
×