என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
சேலத்தில் மாயமான மாணவி 3 மணி நேரத்தில் மீட்பு
சேலத்தில் மாயமான பிளஸ்-1 மாணவி 3 மணிநேரத்தில் மீட்கப்பட்டார்.
சேலம்:
சேலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் சரியாக படிக்காததால் இவரது தாயார் அறிவுரை வழங்கினார், இதனால் கோபம் அடைந்த அந்த மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
இதனால் பதறிய பெற்றோர் இது குறித்து உடனடியாக அழகாபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட போலீசார் அந்த சிறுமியின் கையில் இருந்த செல்போன் சிக்னல் மூலம் அவர் இருக்கும் இடத்தை பார்த்தனர்.
அப்போது அவர் ஈரோட்டில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக ஈரோடு போலீசாரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு பெற்றோருடன் விரைந்து சென்ற அழகாபுரம் போலீசார் 3 மணி நேரத்தில் சிறுமியை மீட்டனர்.
சிறுமி காணாமல் போன 3 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
Next Story






