search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம்
    X
    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குசாவடிகளுக்கு ஒதுக்கும் பணி

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 218 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பேரூராட்சிகளில் 69 வாக்கு சாவடிகளும், குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் 97 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி 384 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 218 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 பேரூராட்சிகளில் 69 வாக்கு சாவடிகளும், குன்றத்தூர், மாங்காடு நகராட்சிகளில் 97 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குசாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகள் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் சீரற்ற மயமாக்கல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தியால் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் நாராயணன், பேரூராட்சி உதவி இயக்குனர் வில்லியம் ஜெசுதாஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×