search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடியும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி.
    X
    இடியும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி.

    இடியும் அபாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒட்டு வேலைகள் செய்த போதிலும் தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி செல்லப்பிள்ளை பாளையத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இத்தொட்டி இப்போது மோசமாக உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

    பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2013-14ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 57 ஆயிரம் செலவு செய்யப்பட்டது.

    ஆனால் ஒட்டு வேலைகள் செய்த போதிலும் தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே அதை உடனடியாக இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×