search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருத்தரங்கு நடைபெற்ற காட்சி
    X
    கருத்தரங்கு நடைபெற்ற காட்சி

    உர நிர்வாகத்தை பின்பற்றினால் மண் வளம் பாதிப்பது தவிர்க்கப்படும் - வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

    விவசாயத்தை லாபகரமான, திருப்திகரமான தொழிலாக மாற்ற விவசாயிகள் திட்டமிடுதல் அவசியமாகும்.
    உடுமலை:

    உடுமலை அருகே மானுப்பட்டியில் தென்னை விவசாய கருத்தரங்கம் மற்றும் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மைய தொடக்க விழா நடந்தது. முன்னோடி விவசாயி அரவிந்த் தலைமை வகித்தார். இயற்கை விவசாயி அப்துல்கலாம் வரவேற்றார். ஆராய்ச்சியாளர் பாலகுமார் தென்னை சாகுபடி குறித்து பேசினார்.

    தொடர்ந்து அரசின் சிறப்பு திட்ட செயலாக்க துறை வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் பேசியதாவது: 

    விவசாயத்தை லாபகரமான, திருப்திகரமான தொழிலாக மாற்ற விவசாயிகள் திட்டமிடுதல் அவசியமாகும். முதற்கட்டமாக அனைவரும் தங்கள் விளைநிலத்தில் மண், நீர் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகளை தனியாக குறித்து வைத்துக்கொண்டு உர நிர்வாகத்தை பின்பற்றினால் செலவு குறைவதுடன் மண் வளம் பாதிப்பதும் தவிர்க்கப்படும்.

    தென்னை மரங்களுக்கு அதிக தண்ணீர் பாய்ச்சுவதால் உவர்ப்புத்தன்மை அதிகரிப்பு, வேரோட்டம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். அங்கக வேளாண் முறைகளை படிப்படியாக விவசாயிகள் பின்பற்றலாம். இடுபொருட்களை தாங்களே தயாரித்து மதிப்பு கூட்டுவதிலும் விவசாயிகள் ஈடுபட்டால் லாபம் கிடைக்கும் என்றார். 
    Next Story
    ×